Wednesday, 3 April 2013

பங்காளர்களின் உருமைகள் !

பங்குதாரர்களுக்கு, வணக்கம் !
Dear Partnars !
 

ஆறு வயதிற்கு மேற்பட்ட எந்த ஒரு மனிதரும் - குழந்தையும் தான் விரும்பும் எந்த ஒரு நேரத்திலும், எந்த ஒரு ஊரிலும் இணையத்தளம் மூலம் அல்லது தனக்கு அருகில் உள்ள விவசாய பங்காளர் பண்ணை வீட்டிற்கு தனி நபராக அல்லது குடும்பத்துடன் வரவும் தன்னை பங்காளராக இணைத்துக்கொள்ளவும் பூரண உருமை உடையவர் !

ஜாதி, இனம், மதம், மொழி, நாடு எண்ற எந்த வித்தியாசமும் இல்லை ! 

வயது கல்வி வேறுபாடுகள் எதுவும் இல்லை ! 

ஆண், பெண், குழந்தைகள் பேதம் இல்லை !

பண்ணை வீட்டின் பங்கு உருமைகள் நிரந்தரமானவை !

எக்காரணம் கொண்டும் எவருடைய அடிப்படை பங்கு உருமையையும் பறிக்கும் உருமை,  அதிகாரம் எவருக்கும் கிடையாது !

விவசாய பண்ணை வீட்டின் நிகழ்கால நிர்வாகத்தின் விதிகளுக்கு அமைவாக,

பங்காளர் ஒருவர் தான் விரும்பிய எந்த நேரத்திலும் பண்ணை வீட்டில் தங்குவதற்கு வர ஊருமை உடையவர் !

அவ்வாறே தான் விரும்பிய எந்த நேரத்திலும் பண்ணையை விட்டு வெளியேறும் அதிகாரமும் உள்ளவர் !

பண்ணை வீட்டில் தங்கி இருக்கும் போது ,

உண்ணவும்,
உறங்கவும்,
ஒய்வெடுக்கவும்,
பண்ணை வேலைகளில் பங்கெடுக்கவும்,
தெரியாதவற்றை கற்றுக்கொள்ளவும்,
கேழ்விகள் கேட்கவும்,
மருத்துவ மற்றும் ஆன்மீக பராமரிப்புகள் உதவிகளைப் பெறவும்
பண்ணை வீட்டில் உள்ள இன்ன பிற வசதிகளை பெறவும்
ஒவ்வொரு பங்காளரும் உருமையும், கடமையும், அதிகாரமும் உள்ளவர்.

பண்ணை வீட்டின் பங்காளர்களுக்கான 

வங்கிக்கணக்கு ( ATM காட் ),

ஊக்க ஊதியம் மற்றும் ஒய்வூதியம்,
கல்வி, மருத்துவம், சட்ட பாதுகாப்பு,
மரண ஆதாரம் 

போண்றவை தொடர்பிலான காப்புறுதிகள் பற்றிய தஸ்தாவேதுகளை தொடர்புடைய கோப்புகளை அவற்றின் நகல்களை நிர்வாகத்திடம் கேட்டு பெற தனி தனி ஒவ்வொரு பங்காளரும் பூரண உருமையும் அதிகாரமும் உடையவர்.

No comments:

Post a Comment

உங்கள் முகநூல் மற்றும் விமர்சனங்களின் அடிப்படையில், வழிகாட்டலில் இந்த ஆக்கதை தினமும் புதுப்பித்து வருகின்றேன் !

குறிப்பிட்ட குறுகிய கால விரைவில் இந்த வரைபு இறுதி செய்யப்பட்டு செயல்வடிவம் பெறும் !

எனவே நண்பர்கள் ஒவ்வொருவரும் தவறாமல் உங்கள் கருத்துக்களையும் வழிகாட்டல்களையும், சாதக பாதகங்களையும் பதிவிட்டு உதவுவதோடு,

இந்த முயற்சியில் நீங்களும் பங்காளராக இணைந்து புதிய தன்னிறைவு சமூகமாக வடிவம் மாற வருமாறு நட்புருமையுடன் வேண்டி உங்களை வரவேற்கின்றேன். _AP