Thursday, 4 April 2013

கல்வி குழு

பங்குதாரர்களுக்கு, வணக்கம் !
Dear Partnars !


விவசாய பண்ணை வீடுகள் தோறும் வகுப்பறைகள் அமைக்க வேண்டும்.

யுனிக்கோடு - ஒருங்குறி ( தமிழ்99 )அடிப்படையில் கம்பியூட்டர் இணையத்தளங்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் தமிழில் தட்டச்சு செய்வதில் தேர்ச்சி குறைவாக உள்ள பங்காளர்களை பண்ணை வீட்டில் தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு   தமிழ் தட்டச்சில் சிறந்த பயிர்ச்சியை, தேர்ச்சியை உண்டாக்க வேண்டும் !

திருக்குறள் மற்றும் அவை தொடர்புடைய விளக்க உரைகள், கருத்துகள் தினமும் தொடர்ச்சியாக பண்ணை வீட்டில் பரிமாறப்பட வேண்டும். தனி தனி குறள்கள் தொடர்பில் நடை முறை சூழ்நிலைகளோடு ஒப்பிட்டு சுவையான விவாதங்களும் விமர்சனங்களும் நடக்க வேண்டும். அவற்றுக்கு சரியான தீர்ப்புகளும் சொல்லப்பட வேண்டும்.

பண்ணை வீட்டின் இணையத் தளத்தினை பயன்படுத்துவது பற்றிய பங்குதாரர்களின் தயக்கத்தை, சந்தேகங்களை தேடி கண்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும். அவர்களுக்கு வழி காட்ட வேண்டும்.
 
அரச சார்பு உள்ள மற்றும் இல்லாத பல நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட துறைகள் பல்வேறு விதமான கல்விகளையும், பயிற்சிகளையும் இலவசமாக வழங்குகின்றன. 

சில நிறுவனங்கள் கூடவே உதவித்தொகைகளும் வளங்குகின்றன. மேற்கொண்டு படிக்க கடன் தருகின்றன. பின்னர் தொளில் தொடங்க கடன் தருகின்றன . இவ்வாறான படிப்புகள் எவை எவை இருக்கின்றன ? இவற்றில் எங்கள் பண்ணை வீட்டின் நலனுக்கு, எவ்வாறான படிப்புகள் , பயிர்ச்சிகள் பயன்படும் எண்பதை கண்டறிந்து எங்கள் பங்காளர்களுக்கு எங்கள் இல்லத்திலேயே தேவையான பயிர்ச்சிகள் மற்றும் கல்வி வசதிகள் கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.



No comments:

Post a Comment

உங்கள் முகநூல் மற்றும் விமர்சனங்களின் அடிப்படையில், வழிகாட்டலில் இந்த ஆக்கதை தினமும் புதுப்பித்து வருகின்றேன் !

குறிப்பிட்ட குறுகிய கால விரைவில் இந்த வரைபு இறுதி செய்யப்பட்டு செயல்வடிவம் பெறும் !

எனவே நண்பர்கள் ஒவ்வொருவரும் தவறாமல் உங்கள் கருத்துக்களையும் வழிகாட்டல்களையும், சாதக பாதகங்களையும் பதிவிட்டு உதவுவதோடு,

இந்த முயற்சியில் நீங்களும் பங்காளராக இணைந்து புதிய தன்னிறைவு சமூகமாக வடிவம் மாற வருமாறு நட்புருமையுடன் வேண்டி உங்களை வரவேற்கின்றேன். _AP