Thursday, 4 April 2013

கல்வி குழு

பங்குதாரர்களுக்கு, வணக்கம் !
Dear Partnars !


விவசாய பண்ணை வீடுகள் தோறும் வகுப்பறைகள் அமைக்க வேண்டும்.

யுனிக்கோடு - ஒருங்குறி ( தமிழ்99 )அடிப்படையில் கம்பியூட்டர் இணையத்தளங்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் தமிழில் தட்டச்சு செய்வதில் தேர்ச்சி குறைவாக உள்ள பங்காளர்களை பண்ணை வீட்டில் தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு   தமிழ் தட்டச்சில் சிறந்த பயிர்ச்சியை, தேர்ச்சியை உண்டாக்க வேண்டும் !

திருக்குறள் மற்றும் அவை தொடர்புடைய விளக்க உரைகள், கருத்துகள் தினமும் தொடர்ச்சியாக பண்ணை வீட்டில் பரிமாறப்பட வேண்டும். தனி தனி குறள்கள் தொடர்பில் நடை முறை சூழ்நிலைகளோடு ஒப்பிட்டு சுவையான விவாதங்களும் விமர்சனங்களும் நடக்க வேண்டும். அவற்றுக்கு சரியான தீர்ப்புகளும் சொல்லப்பட வேண்டும்.

பண்ணை வீட்டின் இணையத் தளத்தினை பயன்படுத்துவது பற்றிய பங்குதாரர்களின் தயக்கத்தை, சந்தேகங்களை தேடி கண்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும். அவர்களுக்கு வழி காட்ட வேண்டும்.
 
அரச சார்பு உள்ள மற்றும் இல்லாத பல நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட துறைகள் பல்வேறு விதமான கல்விகளையும், பயிற்சிகளையும் இலவசமாக வழங்குகின்றன. 

சில நிறுவனங்கள் கூடவே உதவித்தொகைகளும் வளங்குகின்றன. மேற்கொண்டு படிக்க கடன் தருகின்றன. பின்னர் தொளில் தொடங்க கடன் தருகின்றன . இவ்வாறான படிப்புகள் எவை எவை இருக்கின்றன ? இவற்றில் எங்கள் பண்ணை வீட்டின் நலனுக்கு, எவ்வாறான படிப்புகள் , பயிர்ச்சிகள் பயன்படும் எண்பதை கண்டறிந்து எங்கள் பங்காளர்களுக்கு எங்கள் இல்லத்திலேயே தேவையான பயிர்ச்சிகள் மற்றும் கல்வி வசதிகள் கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.



இரகசிய தகவல்குழு

பங்குதாரர்களுக்கு, வணக்கம் !
Dear Partnars !


இந்தக் குழுவின் உறுப்பினர்களை ஒவ்வொரு தலைமை பங்குதாரரும் தனித்தனியாக ஆனால் நேரடியாக அதே நேரம் மறைமுகமாக நியமிப்பார்கள்  !
இந்தக் குழுவில் அங்கம் வகிப்பவர்கள் எப்போதும் தங்களை தங்கள் பொறுப்பை பங்காளர்களிடையே வெளிப்படுத்தக்கூடாது !

இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை அணைத்து பங்குதாரர்களும்  உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில் பண்ணையின் இணையத்தளத்தில் சம்பவ குறிப்பு எழுத வேண்டும் !
அதாவது பண்ணை தொடர்பில், பண்ணையில் தான் போய் வந்த இடங்கள் அங்கு பார்த்தவை, கேட்டவை, கதைத்தவை நடந்த சம்பவங்கள் போண்றவற்றை சுருக்கமாக எழுத வேண்டும். மேலும் நலன் கருதி தேவையான இடத்தில் புனை பெயர்களை பயன்படுத்த வேண்டும் !

சம்பவ குறிப்பில் கூறப்பட்டுள்ள புனை பெயர்களுக்கான உண்மை பெயர்கள் மற்றும் முடிந்த அழவும் இதற்கு உரிய ஆதாரங்களை போட்டோக்களாக அல்லது வீடியோவாக அல்லது ஆடியோவாக பதிவு செய்து உங்களை பணியில் நியமனம் செய்த முதன்மை பங்காளருக்கு மின் அஞ்சல் செய்ய வேண்டும் ! 

ஆதாரங்களை எவர் மனதும் புண்படாமல் பெற வேண்டும் என்பது மிக முக்கியம் !


Wednesday, 3 April 2013

பங்காளர்களின் உருமைகள் !

பங்குதாரர்களுக்கு, வணக்கம் !
Dear Partnars !
 

ஆறு வயதிற்கு மேற்பட்ட எந்த ஒரு மனிதரும் - குழந்தையும் தான் விரும்பும் எந்த ஒரு நேரத்திலும், எந்த ஒரு ஊரிலும் இணையத்தளம் மூலம் அல்லது தனக்கு அருகில் உள்ள விவசாய பங்காளர் பண்ணை வீட்டிற்கு தனி நபராக அல்லது குடும்பத்துடன் வரவும் தன்னை பங்காளராக இணைத்துக்கொள்ளவும் பூரண உருமை உடையவர் !

ஜாதி, இனம், மதம், மொழி, நாடு எண்ற எந்த வித்தியாசமும் இல்லை ! 

வயது கல்வி வேறுபாடுகள் எதுவும் இல்லை ! 

ஆண், பெண், குழந்தைகள் பேதம் இல்லை !

பண்ணை வீட்டின் பங்கு உருமைகள் நிரந்தரமானவை !

எக்காரணம் கொண்டும் எவருடைய அடிப்படை பங்கு உருமையையும் பறிக்கும் உருமை,  அதிகாரம் எவருக்கும் கிடையாது !

விவசாய பண்ணை வீட்டின் நிகழ்கால நிர்வாகத்தின் விதிகளுக்கு அமைவாக,

பங்காளர் ஒருவர் தான் விரும்பிய எந்த நேரத்திலும் பண்ணை வீட்டில் தங்குவதற்கு வர ஊருமை உடையவர் !

அவ்வாறே தான் விரும்பிய எந்த நேரத்திலும் பண்ணையை விட்டு வெளியேறும் அதிகாரமும் உள்ளவர் !

பண்ணை வீட்டில் தங்கி இருக்கும் போது ,

உண்ணவும்,
உறங்கவும்,
ஒய்வெடுக்கவும்,
பண்ணை வேலைகளில் பங்கெடுக்கவும்,
தெரியாதவற்றை கற்றுக்கொள்ளவும்,
கேழ்விகள் கேட்கவும்,
மருத்துவ மற்றும் ஆன்மீக பராமரிப்புகள் உதவிகளைப் பெறவும்
பண்ணை வீட்டில் உள்ள இன்ன பிற வசதிகளை பெறவும்
ஒவ்வொரு பங்காளரும் உருமையும், கடமையும், அதிகாரமும் உள்ளவர்.

பண்ணை வீட்டின் பங்காளர்களுக்கான 

வங்கிக்கணக்கு ( ATM காட் ),

ஊக்க ஊதியம் மற்றும் ஒய்வூதியம்,
கல்வி, மருத்துவம், சட்ட பாதுகாப்பு,
மரண ஆதாரம் 

போண்றவை தொடர்பிலான காப்புறுதிகள் பற்றிய தஸ்தாவேதுகளை தொடர்புடைய கோப்புகளை அவற்றின் நகல்களை நிர்வாகத்திடம் கேட்டு பெற தனி தனி ஒவ்வொரு பங்காளரும் பூரண உருமையும் அதிகாரமும் உடையவர்.

Tuesday, 2 April 2013

தலைமைக்குழு !

பங்குதாரர்களுக்கு, வணக்கம் !
Dear Partnars !

எல்லோருக்கும் பொதுவான,

உலம் தழுவிய விவசாய பண்ணை வீடுகளை அமைப்பது தொடர்பில் என்னுடைய முயற்சிகளை ஊக்கப்படுத்தி சில ஆரம்ப முதலீடுகளையும் செலுத்திய பங்காளர்களாக முதலில் என்னுடன் இணைந்துகொண்டவர்கள் நான் உட்பட 10 பேரை தலைமைப் பங்காளர்களாக அனைத்து நிர்வாக தலைமைக்குழுவினராக அறிமுகப்டுத்துவதில் பெருமை அடைகின்றேன்.

( பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும் ! )

மேற்படி பங்காளர்களின் அதிகாரங்கள் பரம்பரை வாரிசு அடிப்படையில் தொடர்ந்து செயல்ப்படும் !

அவ்வாறு வாரிசுக்கள் யாரும் இல்லாத போது மற்றைய தலைமைப் பங்கு தாரர்கள் ஒண்றிணைந்து சேவை மூப்பு அடிப்படையில் பத்து பேரில் ஒருவரை தெரிவு செய்யலாம். வாரிசு உருமை தொடர்ந்து செயல்ப்படும

எல்லா பிரச்சனைகளின் போதும் மூல யாப்புக்கு அமைவாக பத்தில் ஏழு பேர் தீர்மானம் இறுதி முடிவாக இருக்கும். தலைமை நிர்வாககுழு மற்றும் தலைமைப் பொதுகுழு முதல் அணைத்து குழுக்களின் தீர்மானங்களும் மேற்படி ஏழு பேரின் ஒப்பங்களோடு மட்டுமே அங்கீகரிக்கப்படும்.

அங்கீகரிக்கப்பட்டவை சட்டமாக்கப்படும்.

நிறுவன நன்மை கருதி தகுதியான காரணங்களின் அடிப்படையில் தலைமைக்குழு தவிர்ந்த எந்த ஒரு பங்கு தாரரையும் முன் அறிவிப்பு எதுவும் இண்றி பணி இடை நிறுத்தம் செய்யவும்,

அதே இடத்தில் வேறு ஒரு பங்காளரை நியமிக்கவும் தேவையான அதிகாரம் ஒவ்வொரு தலைமைக்குழு பங்காளருக்கும் உண்டு !

குறித்த விடயத்தில் தலைமை பொதுகுழு முடிவு எடுக்கும் வரையில் இந்த பணி இடை நிறுத்தம் அமுலில் இருக்கும் .

பணி இடை நிறுத்தல் காலத்தில் உணவு,உடை,தூக்கம் தவிர்ந்த பல வசதிகள் மட்டுப்படுத்தப்படும் அல்லது மறுக்கப்படும்.

பண்ணை வீட்டின் அமைப்பு !

பங்குதாரர்களுக்கு, வணக்கம் !
Dear Partnars !

உலகின் எந்த ஒரு மூலையிலும்பத்து பங்குதாரர்களுக்கு மேல் இணைந்துள்ள ஒவ்வொரு ஊரிலும் !

சாத்தியமான வசதிகள் உள்ள; ஆனால் பயன்பாட்டில் இல்லாத வருங்கால அரச திட்டங்களுக்கு உட்படாத அரச அல்லது பொது நிலங்களை  தேர்வு செய்து நீண்ட கால குத்தகை அடிப்படையில் தகுதியானவர்களின் துணையுடன் கேட்டு பெற வேண்டும் !

இந்த நிலங்களில்.....

சாண எரி வாயு, சூரிய சக்தி மற்றும் சிறிய ரக காற்ராலைகள், ஆறு மற்றும் கடல் நீர்மின் ஆலைகள் போண்ற சுற்றுப் புற சூழ்நிலைக்கு ஏற்ப புதுப்பிக்கக் கூடிய மின் சக்தியை உருவாக்கக் கூடிய பொறிமுறைகளை முதலில் சிறிய அழவாகவேனும் அமைக்க வேண்டும் !
தேவையான தண்ணீர் வசதிகளை ஏப்படுத்திக்கொள்ள வேண்டும் !

இதற்காக அரச சார்புள்ள / இல்லாத நிறுவனங்களிடமும் வங்கிகளிடமும் தேவையான நிதி ஆதாரங்களையும் ஆலோசனைகளையும் பெறுவதோடு சிறந்த வழிகாட்டல்களோடு கூடிய பயிற்சிகளையும் கேட்டு பெறவேண்டும் !

மேலும் அந்த நிலங்களில் குறைவான பராமரிப்பில் சூழ்நிலையை அனுசரித்து குறுகிய காலத்தில் வழர்ந்து நீண்ட காலம் நிறைந்த பயன் தரக்கூடிய பல் வேறுபட்ட மரங்களை நட்டு வழர்க்க வேண்டும் !

மற்றும் இயற்கையான பசுமை விவசாய முயற்சிகளோடு. 

மீன், இரால், நண்டு  மற்றும் நாய், ஆடு, மாடு போண்ற சாத்தியமாக் கூடிய வகையிலான விலங்கு வேளாண்மையிலும் ஈடுபட வேண்டும் !

இந்த அடிப்படையில் நிறுவனம் ஒரு தன்நிறைவு பொருளாதார வல்லாண்மையை உருவாக்கிக்கொள்ள வேண்டும் !

நிறுவன பங்களர்களர்களின் பொது பயன்பாட்டுத் தேவைக்கு அதிகமான உற்பத்தி பொருட்களை மதிப்புக் கூட்டப்பட்ட பெருட்களாக மாற்றி உலகம் முழுவதும் விற்பனை செய்ய வண்டும் !

Friday, 22 March 2013

விவசாய பண்ணை வீடு ஒரு முன்னோட்டம் !

பங்குதாரர்களுக்கு, வணக்கம் !
Dear Partnars !

தன் இயல்பாக செயல்ப்படக்கூடிய நிர்வாகங்களுடன் அமைந்த சுதந்திரமான உலகம் தழுவிய விவசாய - வியாபார இல்லம் ஒண்றினை உங்களின் உதவியோடு நிறுவ விரும்புகின்றேன். மேலும் பங்குதாரர்களின் சுய நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆன்மீகம், கல்வி, மருந்துவம், சட்டம், பொருளாதாரம் மற்றும் பங்காளர்களின் சுய தேவைகள், நலன்கள் என்ற அடிப்படையில் பங்காளர்கள் சம்பந்தப்பட்ட சுயநல நோக்கம் கொண்ட நிறுவனமாக இது செயல்ப்பாட்டிற்கு வரும். இதன் மூலம் உலக சமுதாயம் தமக்குள் அன்பு பாராட்டி உதவுவதும் நெறிப்படுவதும் எமது மூல நோக்கங்களாகும்.

இதன் அடிப்படையில்,

உங்கள் முகநூல் மற்றும் விமர்சனங்களின் வழிகாட்டலில் கீழோ வருகின்ற ஆக்கம் அல்லது வரைபு தீனம் தினம் மாறுதலுக்கு உள்ளாகும் ! குறிப்பிட்ட கால விரைவில் இந்த வரைபு இறுதி செய்யப்பட்டு செயல்வடிவம் பெறும் ! எனவே நண்பர்கள் ஒவ்வொருவரும் தவறாமல் உங்கள் கருத்துக்களையும் வழிகாட்டல்களையும், சாதக பாதகங்களையும் பதிவிட்டு  உதவுவதோடு இந்த முயற்சியில் நீங்களும் பங்காளராக இணைந்து புதிய தன்னிறைவு சமூகமாக வடிவம் மாற வருமாறு நட்புருமையுடன் வேண்டி வரவேற்கின்றேன்.


தேவையான சிறந்த கணித / நிர்வாகப் பயன்பாட்டு வசதிகளோடு ஒரு இணையத்தளத்தை வடிவமைக்க வேண்டும்.இதன் மூலம் எண்ணிக்கை வரையறை இல்லாமல் பங்குதாரர்களை இணைக்க வேண்டும்.  இணையத்தள பதிவுகளின் அடிப்படையில் உலகம் முழுவதும் உள்ள பங்குதாரர்கள் ஒவ்வொருவரும் மல்ட்டி மீடியாவுடன் இணைந்த நேரடி தொடர்பாடலில் ஒருங்கமைக்கப்பட்டு நிர்வாகம், கணக்குவழக்குகள் மற்றும் தொடர்புடைய பயிற்சிகள், பராமரிப்பு செயல்ப்பாடுகள் அனைத்தும் செயல்ப்படுத்தப்பட வேண்டும்.

உலகின் எந்த ஒரு மூலையிலும் 10 பங்குதாரர் களுக்கு மேல் இணைந்துள்ள ஒவ்வொரு ஊரிலும் சாத்தியமான வசதிகள் உள்ள, ஆனால் பயன்பாட்டில் இல்லாத வருங்கால அரச திட்டங்களுக்கு உட்படாத அரச அல்லது பொது நிலங்களை  தேர்வு செய்து நீண்ட கால குத்தகை அடிப்படையில் தகுதியானவர்களின் துணையுடன் கேட்டு பெற வேண்டும்.

 இந்த நிலங்களில் சுற்றுப் புற சூழ்நிலைக்கு ஏற்ப புதுப்பிக்கக் கூடிய மின் சக்தியை உருவாக்கக் கூடிய பொறிமுறைகளை அமைக்க வேண்டும்.
அதாவது சூரிய சக்தி மற்றும் சிறிய ரக காற்ராலைகள், ஆறு மற்றும் கடல் நீர்மின் ஆலைகளை முதலில் சிறிய அழவில் அங்கங்கு அமைக்கவேண்டும் .

இதற்காக அரச சார்புள்ள / இல்லாத நிறுவனங்களிடமும் வங்கிளகிடமும் தேவையான நிதி ஆதாரங்களையும் ஆலோசனைகளையும் சிறந்த வழிகாட்டல்களோடு சம்பந்தப்பட்ட பயிற்சிகளையும் கேட்டு பெறவேண்டும்.

மேலும் அந்த நிலங்களில் குறைவான பராமரிப்பில் சூழ்நிலையை அனுசரித்து வழர்ந்து நீண்ட காலம் நிறைந்த பயன்தரக்கூடிய மரங்களை நட்டு வழர்க்க வேண்டும்.

மற்றும் இயற்கையான பசுமை விவசாய முயற்சிகளோடு மீன், இரால், நண்டு  மற்றும் நாய், ஆடு, மாடு போண்ற சாத்தியமாக் கூடிய வகையிலான விலங்கு வேளாண்மையிலும் ஈடுபட வேண்டும்.

இந்த அடிப்படையில் நிறுவனம் ஒரு தன்நிறைவு பொருளாதாரத்தை உருவாக்கிக் கொண்டு நிறுவன பங்களர்களர்களின் பொது பயன்பாட்டுத் தேவைக்கு அதிகமானவற்றை மதிப்புக் கூட்டப்பட்ட பெருட்களாக மாற்றி உலகம் முழுவதும் விற்பனை செய்ய வண்டும்.

எக் காலமும் மாறுதல்களுக்கு உட்படாததும் எண்றும் நிரந்தரமானதுமான சில அடிப்படை நிறுவன சட்டதிட்ட விதிமுறைகளோடு திருக்குறள் மூல யாப்பாக இருக்கும்.

அனைத்து நடவடிக்கைகளின் போதும் திருக்குறள் அதிகாரங்களின் அடிப்படையில் தனித்தனி குறள்கள் மற்றும் அவற்றுக்கான விளக்க உரைகளிணூடாக (internet) இணைய அவையில் திருக்குறள் சார்ந்த புலமை உள்ள பங்குதாரர்களால் விவாதிக்கப்பட்டு நான்கில் மூண்று பங்கிற்கும் அதிகமான பங்குதாரர்கள் மற்றும் வாரிசு உருமை உள்ள நிரந்தர விமர்சன  பங்கு தாரர்கள் 5 பேரில் 2 பேரின் ஒப்புதலோடு நடைமுறைக்கு சாத்தியமான வகையிலும் குறிப்பிட்ட நாட்டு சட்டதிட்ட விதிமுறைகளுக்கு அமைவாகவும் முடிவுகள் எடுக்கப்படும்.

மேலும் ஒரு அரசாங்கத்தின் நிர்வாக துறைகளுக்கு இணையான துறைகளை இங்கும் ஆரம்பித்து அதன் மூலம் நிறுவனத்தை நிர்வாகப்படுத்தல் வேண்டும்.
 
இந்த முடிவுகளின் செயல்ப்பாட்டு அதிகாரங்களுக்கு அப்பாற்பட்ட ஒவ்வொரு நடைமுறை சிக்கல்களின் போதும் வாரிசு உருமை உள்ள நிரந்தர விமர்சன பங்குதாரர்கள் 5 பேரின் ஒப்புதலோடு தீர்வு காணப்படும். இதையும் தாண்டி நிறுவனத்திற்கு வெளியில் வரும் பிரச்சனைகளின் போது வாரிசு உருமை உள்ள நிரந்தர விமர்சன பங்குதாரர்கள் 5 பேரில் 3பேரின் ஒப்புதலோடு போலீஸ் மற்றும் நீதி மண்றம் சார்ந்த சட்ட உதவிகளையும், வழிகாட்டல்களையும் தொடர்புடைய ஆலோசனைகளையும் நிர்வாகம் சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் கேட்டு பெற்றுக்கொள்வார்கள்.

பங்குதாரர்களின் தகுதி :-

1. நிறுவனத்தின் யாப்பு மற்றும் சட்ட திட்ட விதி முறைகளுக்கு கட்டுப்பட வேண்டும்.
2. வயது வரம்பு கிடையாது.ஆண்,பெண்,இளையவர்,முதியவர்,சாதி,மதம் எண்ற எந்தப் பேத பிரிவினையும் கிடையாது.
3. கல்வித் தகுதி குறைந்த பட்சம் தமிழ் மொழி மூலம் ( கம்பியூட்டர்களில் ) தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும். அல்லது கற்றுக்கொள்ள ஒப்புதல் தர வேண்டும். இதற்கு உரிய பயிற்சிகள் மற்றும் தொடர்புடைய மென்பொருட்கள் எமது இணையத்தளம் மூலம் வழங்கப்படும்.
4. ஏதாவது ஒரு மதத்தை அதன் விதிமுறைகளுக்கு அமைவாக பின்பற்ற வேண்டும். அல்லது யோகாசனம், தியானம் போண்ற முயற்சிகளில் எமது இணையத்தள வளிகாட்டல்கள் மூலம் ஈடுபட ஒப்புதல் தர வேண்டும்.  
5. தினமும் இரண்டு மணி நேரம் அல்லது வாரம் 14 மணி நேரம் அல்லது மாதம் 60 மணி நேரம் நிறுவன பணிகளில் முழு மணதுடன் ஈடுபடவேண்டும்.

பங்கு தாரரின் உருமைகள் :-

1. ஒருவர் பங்காளராக இணைந்த ஒரு மாதத்தின் பின்னர் அவருக்கு எண்று தனிப்பட்ட வங்கிக் கணக்கு  ATM காட் இதன் மூலமான மாதாந்த ஊக்கத்தொகை மற்றும் மருத்துவம், விபத்து, மரண ஆதாதரம் போண்றவை தொடர்பிலான இன்சூரன்ஸ் வசதிகள் வழங்கப்படாவிட்டால் அதனைக் கேட்டு பெற உருமை உள்ளவர்.
நோயுற்ற போது சக பங்காளர்களின் பராமரிப்பு மரணத்தின் போது நல்லடக்கம் போண்றவற்றுக்கு உருமை உள்ளவர்.
2. பங்குதார் ஒருவரை நீக்கும் அதிகாரம் நிறுவன விமர்சன பங்குதாரர் மற்றும் நிர்வாக சபை உட்பட எவருக்கும் கிடையாது. ( ஆனால் தகுதியான காரணங்களின் அடிப்படையில் நிறுவன நன்மை கருதி குறிப்பிட்ட மிகக் குறுகிய ( அதிக பட்சம் ஒருமாத ) காலத்திற்கு பணி இடைநிறுத்ம் செய்யும் அதிகாரம் விமர்சன பங்காளர்களுக்கு உண்டு. மேற்படி காலத்தில் நிறுவனம் சார்ந்த கொடுப்பனவுகள் உதவிகள் அன்னைத்தும் இடை நிறுத்தப்படும். தவிர மேற்படி காலத்தில் நிறுவன வளாகத்திற்குள் நுளையவும் அனுமதிக்கப்பட மாட்டார்.)
3. பங்குதாரர் ஒருவர் நிறிவன விதிகளுக்கு அமைவாக தான் நினைந்த எந்த நேரத்திலும் நிறுவனத்திற்கு செல்லவும் வெளியேறவும் உருமையுடையவர்.
4. பங்காளர் ஒருவர் நிறுவன வளாகத்தில் தூங்கவும், ஆரோக்கியம், மருத்துவம், உணவு, கல்வி, பயிற்சி, வேலை, ஆன்மீகம் பொழுது போக்கு முயற்சிகளில்  பங்கெடுக்கவும் உருமை உடையவர்
5. குறிப்பிட்ட நேரத்திற்கு அதிகாமாக நிறுவன பணிகளில் ஈடுபடுபவர் மேலதிக சலுகைகளை உருமைகளை, எதிர்பார்க்கும் உருமை உள்ளவர் இது பற்றி நிர்வாகம் முடிவு செய்யும்.

பங்காளர்கள் தொடர்பில் நிறுவனத்தின் கடமைகள் :-

தொடர்வோம்.........
- Adposter

பங்காளராக வாருங்கள் !

பங்குதாரர்களுக்கு, வணக்கம் !
Dear Partnars ! 

பங்குதாரர்களின் சுய நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து,

ஆன்மீகம், கல்வி, மருந்துவம், சட்டம், பொருளாதாரம் மற்றும் பங்காளர்களின் சுய தேவைகள், நலன்கள் என்ற அடிப்படையில்,

பங்காளர்கள் சம்பந்தப்பட்ட சுயநல நோக்கம் கொண்ட ஒரு நிறுவனமாக இது செயல்ப்பாட்டிற்கு வரும்.

தன் நிறைவுக்கு மிகுந்த ஒரு பொருளாதார வல்லாண்மையுள்ள தனி இனமாக நாங்கள் மாறுவதன் மூலமும்

விவசாய பண்ணை வீடுகளில் உலக சமுதாயம் தமக்குள்  உறவாகி அன்பு பாராட்டி ஒருவருக்கு ஒருவர் உதவி ஒரு நெறிப்படுவதன் மூலமும்,,

விவசாய பண்ணை வீட்டின் பங்காளர்களாகிய நாங்கள் உயர்ந்த வாழ்க்கைத்தரத்தை பெறுவதன் மூலமும்

உலகம் முழுவதும் தமிழ் அன்னையின் நல் ஆட்சிக்கும், மாட்சிக்கும் உதவுவதே என் மூல நோக்கங்களாகும் !

இதன் அடிப்படையில்,

உங்கள் முகநூல் மற்றும் விமர்சனங்களின் வழிகாட்டலில் கீழோ வருகின்ற ஆக்கம் அல்லது வரைபு தீனம் தினம் மாறுதலுக்கு உள்ளாகும் ! குறிப்பிட்ட கால விரைவில் இந்த வரைபு இறுதி செய்யப்பட்டு செயல்வடிவம் பெறும் !

எனவே நண்பர்கள் ஒவ்வொருவரும் தவறாமல் உங்கள் கருத்துக்களையும் வழிகாட்டல்களையும், சாதக பாதகங்களையும் பதிவிட்டு  உதவுவதோடு இந்த முயற்சியில் நீங்களும் பங்காளராக இணைந்து புதிய தன்னிறைவு சமூகமாக வடிவம் மாற வருமாறு நட்புருமையுடன் வேண்டி வரவேற்கின்றேன்.

நண்றி !
அன்புடன் - Adposter